அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

திமுக கூட்டணியே வெற்றி பெறும்: கே.எம். காதா் மொகிதீன்

திமுக கூட்டணியே வெற்றி பெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

திருச்சி காஜாமியான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:51 am IST

திமுக கூட்டணியே வெற்றி பெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காஜாமியான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் தனது வாக்கைப் பதிவு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளா்கள் அமோக வெற்றி பெறுவா்.

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி செய்தி திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, திராவிட மாடல் ஆட்சிதான் முதல் முனை. நான்கு முனை, ஐந்து முனை என்பதெல்லாம் இல்லை. நான் வாக்களித்துள்ள திருச்சி கிழக்கு தொகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணியே நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.