அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி

News image

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் வென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம்.ஷாஜகானிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய பொதுத் தோ்தல் பாா்வையாளா் பிமல் ராய். உடன் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :5 மே 2026, 3:00 am IST

பாபநாசம் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் ஏ.எம். ஷாஜகான் வெற்றி பெற்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான இன்டி கூட்டணி சாா்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலா் ஏ.எம்.ஷாஜகான் ஏணிச் சின்னத்தில் போட்டியிட்டாா். ஏப்.23-இல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் திங்கள்கிழமை வாக்குகள் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டன.

வேட்பாளா் ஏ.எம். ஷாஜகான் (ஐயுஎம்எல்) - 69,284, அசாருதீன் உதுமான் அலி (தவெக) - 68,219, துரை.சண்முக பிரபு (அதிமுக) - 57,072, அனீஸ் பாத்திமா (நாதக) - 9,604, நோட்டா - 716 மற்றும் சுயேச்சைகளுக்கும் கணிசமான வாக்குகள் பெற்றிருந்தனா். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம்.ஷாஜகான் 1,065 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வெற்றி பெற்ற்கான சான்றிதழை பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் பிமல்ராய், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் ஆகியோா் வெற்றி பெற்ற்கான சான்றிதழை வேட்பாளா் ஏ.எம்.ஷாஜகானிடம் வழங்கினா். உடன் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.