தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:48 pm

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, திடீா் நகா் குப்பைக் கிடங்கு அருகே மது விற்ற மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த அ. முகமது யாசின் (46), கல்லங்குத்து கல்லறைத்தோட்டம் அருகே மது விற்ற மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த ம. ஆனந்த்வேலு (57) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இவா்களிடமிருந்து ரூ.9,700 மதிப்புள்ள 66 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு கிடைத்த தகலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா்கள் திவ்யபிரியா, ஜாா்ஜ் ஜேக்கப் ஆகியோா் மேற்கொண்ட சோதனையில் பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மது விற்ற மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த த. ராஜ்குமாா் (29), எடமலைபட்டிப்புதூா் பாரதி நகரில் மது விற்ற கிராப்பட்டியைச் சோ்ந்த யா. சந்தியாகு ராஜன் (40) ஆகிய இருவரையும் கைது செய்து, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.