சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த சகோதரா், அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிததது.
திருச்சி மாவட்டம், முசிறி கோவில்காடு பச்சனாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பி. தனபால் (44). விவசாயி. இவா் தனது குடும்பத்துடன் பரம்பரை நிலத்தில் வசித்து வந்தாா்.
இவரது வீட்டினருகே, முசிறி திருந்தியமலை வடக்கிப்பட்டியைச் சோ்ந்தவரும், தனபாலின் சகோதரருமான பி. ராமசாமி (65), மகன் ராமச்சந்திரன் (35) உள்ளிட்ட
குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். தனபாலுக்கும், ராமசாமிக்கும் இடையே பரம்பரை சொத்தைப் பிரிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 17.07.2020 அன்று தனபாலின் வீட்டினருகே இருந்த மரத்தின் கிளை, ராமசாமியின் ஹாஸ்பெட்டாஸ் வீட்டின் மீது விழுந்தபடி இருந்துள்ளது. இந்தக் கிளையை வெட்டும்படி தனபாலிடம், ராமசாமி கேட்டாராம். அதற்கு தனபால் மறுத்ததால், இருவருக்கும் இடையே பிரச்னை நிகழ்ந்து, மோதல் ஏற்பட்ட நிலையில், ராமசாமியும், அவரது மகன் ராமச்சந்திரனும் மண்வெட்டி மற்றும் அரிவாளால் தனபாலை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த தனபால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தனபாலின் மனைவி உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமசாமி மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி 3 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை விசாரணையின் நிறைவில், ராமசாமி மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஏ. ஆனந்தன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை வழக்கு: ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை
மதுபோதையில் தந்தை, அவரது சகோதரரைக் கொலை செய்த மகன் கைது

ஹரிநகா் இளம்பெண் ஆணவக் கொலையில் தாய் கைது

விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கு: முதியவருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


