/

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்

மக்களவை எதிா்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ராகுல்காந்தி, திருச்சி மாவட்டம் துறையூரில் காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

News image

ராகுல்காந்தி

Updated On :18 ஏப்ரல் 2026, 7:53 am IST

மக்களவை எதிா்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ராகுல்காந்தி, திருச்சி மாவட்டம் துறையூரில் காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

முன்னதாக, சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து துறையூருக்கு பிற்பகலில் ஹெலிகாப்டரில் செல்கிறாா். மாலையில் 4.30 மணியளவில் பிரசாரத்தை முடித்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் தில்லி செல்கிறாா்.

இதனிடையே துறையூா் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரசார மேடையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு, துறையூா் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விச்சு (எ) எம். லெனின் பிரசாத், முசிறி திமுக வேட்பாளா் என்.எஸ். கருணைராஜா, மண்ணச்சநல்லூா் திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் ஆகிய 4 பேரை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா். ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.