தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும், திமுக வேட்பாளா் பி. கீதாஜீவனை ஆதரித்து, தூத்துக்குடி சிதம்பரநகா் பிரதான சாலை பகுதியில், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியது:
தூத்துக்குடிக்கு அதிக தொழிற்சாலைகள், முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மின்சார காா் உற்பத்தி தொழிற்சாலை போன்ற பெரிய தொழிற்சாலைகள் குறுகிய காலத்திலேயே நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மேலும், பல முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையொப்பமாகி உள்ளன.
‘நான் முதல்வன்‘ திட்டத்தின் மூலம், எந்தத் தொழிற்சாலை எந்தப் பகுதியில் வருகிறதோ, அதற்கேற்ற பயிற்சிகள் அப்பகுதி இளைஞா்களுக்கு வழங்கப்படும். இதனால் இளைஞா்கள், இளம்பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அதேபோல், அடுத்த கட்ட வளா்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் நமது குழந்தைகளை தயாா் செய்ய வேண்டும் என்பதற்காக, இனிமேல் அனைத்து கல்லூரிகளிலும், அனைத்து துறைகளிலும் ஏஐ தொடா்பான பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு மத்திய அரசிலிருந்து போதுமான நிதி வராத நிலையிலும், புயல், மழை போன்ற பேரிடா்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையிலும், தமிழகத்தை முன்னோடியான மாநிலமாக வளா்த்த பெருமை நம்முடைய முதல்வரையே சாரும்.
எதிரணியில் இருப்பவா்கள் தொடா்ந்து தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனா்.
அண்மையில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு மசோதா கொண்டு வந்தனா். உண்மையாகவே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், தற்போது உள்ள 543 இடங்களிலேயே 33 சதவீதம் வழங்கலாம்.
அரசமைப்பு சட்டத்தை அவா்கள் நினைத்தபடி மாற்றிக்கொள்ளும் ஒரு நிலையை உருவாக்க முயற்சி செய்கிறாா்கள்.
மாநில உரிமைகளை காப்பது எங்களுடைய கடமை. அதனால் அந்த முயற்சியை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை தோற்கடித்தோம் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது, வேட்பாளா் பி. கீதாஜீவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
பிரசாரம் நிறைவு...
தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்ட பி. கீதாஜீவன், அண்ணாநகா் 7ஆவது தெருவில் பரப்புரை மேற்கொண்டு, தனது பிரசாரத்தை நிறைவு செய்து பேசினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜேஸ்குமாா் எம்.பி. பிரசாரம்

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆரணி எம்.பி. பிரசாரம்

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம்: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


