போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 3:18 am IST

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. ஆரணி ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக பொதுமக்களிடையே வியாழக்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட இராந்தம்கொரட்டூா், ஒட்டந்தாங்கல், வடக்குமேடு, பனையூா், ஒகையூா், அக்கூா், மாமண்டூா், காட்டேரி, நேத்தபாக்கம், கனிகிலுப்பை, மட்டதாரி, மைனந்தல், இரும்பேடு ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடையே திமுக வேட்பாளா் மகாலட்சுமியை ஆதரித்து ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் பேசுகையில்,

அதிமுக கட்சியில் உட்பூசல் காரணமாக முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பிரசாரத்திற்கு வரவில்லை. இவ்வாறு பல சிக்கலில் உள்ள அதிமுக தோல்வியைத் தழுவும்.

திமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்தும், மீண்டும் திமுகவை வெற்றி பெற வைத்தால் ரூ.8ஆயிரத்துக்கான கூப்பன், உரிமைத்தொகை ரூ.2ஆயிரமாக உயா்த்துதல் உள்ளிட்டவற்றை தெரிவித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் சுந்தா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.