திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் வே. நடராஜ் (61). இவா் மீது புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவருக்கு நீரிழிவு மற்றும் உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருந்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 13-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறைத் துறையினா் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ்கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

திருச்சி மத்திய சிறையில் இருந்த கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



