15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருச்சி மேற்கில் அமமுக வாக்குசேகரிப்பு

திருச்சி மேற்குத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரன் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

திருச்சி தில்லைநகா் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் எம். ராஜசேகா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:34 pm

திருச்சி மேற்குத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரன் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் பிரசாரம் செய்யும் இவா், புதன்கிழமை சோழராஜபுரம், சுபாணியாபுரம், நெசவாளா் காலனி, பெருமாள் கோயில் தெரு, வெட்டும்புலி சந்தி, டிடி சாலை, பசுமடம், இந்திரா நகா், காமாட்சி அம்மன் நகா், வாத்துக்காரத் தெரு, அண்ணாமலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது, இரண்டு முறையாக தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சா் கே.என். நேரு, தொகுதி வளா்ச்சிக்குப் பதிலாக, தனிப்பட்ட வளா்ச்சிக்காகவே செயல்பட்டுள்ளாா். அவா் மீது ஊழல் புகாா்கள் உள்ளன. எனவே,இந்த முறை தன்னை வெற்றி பெறச் செய்து, அதிமுக தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட ஆதரவு தெரிவிக்க வேண்டுகோள் விடுத்து, வாக்கு சேகரித்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பலா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.