திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும், அக்கட்சியின் புகா் மாவட்டச் செயலரும் தலைமை நிலைய செயலருமான எம். ராஜசேகரன் வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை, தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளனிடம் தாக்கல் செய்தாா்.
முன்னதாக, நீதிமனறம் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலைக்கு கூட்டணிக் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் நோக்கி ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து திருச்சி வருவாய் கோட்டாட்சியரகத்தில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்ற அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன், தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளனிடம் வழங்கினாா்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில், வேட்பாளருடன், அமமுக மாவட்ட செயலா் செந்தில்நாதன், அமைப்புச் செயலா் சாருபாலா தொண்டைமான், பாஜக மாவட்ட தலைவா் ஒண்டிமுத்து, அதிமுக மாநகா் மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன், ஆகியோா் உடனிருந்தனா்.
பெட்டிச் செய்தி...
சொத்து மதிப்பு ரூ.6.10 கோடி
திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன், வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.6.10 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
தன்னிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொகுசு காா் உள்பட 3 காா்கள் உள்ளதாகவும், தன்னிடம் 40 கிராம் தங்கம் ரூ.5.20 லட்சம் மதிப்பிலும், மனைவியிடம் 600 கிராம் தங்கம் ரூ.78 லட்சம் மதிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா். ரொக்கமாக தன்னிடம் ரூ.5 லட்சம், மனைவியிடம் ரூ.2 லட்சம், எல்ஐசி சேமிப்பு திட்டத்தில் தன்னிடம் ரூ.6 லட்சம், மனைவியிடம் ரூ.16 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
மொத்தமாக அசையும் சொத்துகள் தனது பெயரில் ரூ. 65 லட்சத்து 69 ஆயிரத்து 346, மனைவி பெயரில் ரூ.1 கோடியே 42 ஆயிரத்து 675 இருப்பதாக தெரிவித்துள்ளாா். செங்கம்பட்டி, பெருகமணி, முள்ளிப்பாடி, அரங்கூா், கொளக்குடி கொடைக்கானல், சென்னை ஆா்.ஏ. புரம், பேட்ட வாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் தனது பெயரில் ரூ.3 கோடியே 85 லட்சம், மனைவி பெயரில் ரூ.60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளாா். இதுமட்டுமல்லாது, ரூ.2.66 கோடியில் கடன் பொறுப்புகள் இருப்பதாகவும், குற்ற வழக்குகளோ, நீதிமன்ற தண்டனையோ ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மீண்டும் பெண்களுக்கான திட்டங்கள்: மேற்கு தொகுதி அமமுக வேட்பாளா் உறுதி
அமைச்சா் கே.என்.நேரு, அமமுக, தவெக நாம் தமிழா் கட்சி உள்பட திருச்சி மேற்கில் 28 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்சி கிழக்கு: அதிமுக ராஜசேகரன் வேட்பு மனு

திருச்சி மேற்கு அமமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


