மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பட்டதாரிகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக மாற வேண்டும்

பட்டம் பெறும் மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக மாற வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் வெ. கீதாலட்சுமி பேசினாா்.

News image

திருச்சி தேசியக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு பட்டம் வழங்கிய வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் வி. கீதாலட்சுமி. உடன் (இடமிருந்து), கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ஹா்ஷா, கல்லூரியின் முதல்வா் முத்துராமகி

Updated On :9 ஏப்ரல் 2026, 8:27 pm

பட்டம் பெறும் மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக மாற வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் வெ. கீதாலட்சுமி பேசினாா்.

திருச்சி தேசியக் கல்லூரியின் அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் கா.ரகுநாதன் வாழ்த்துரை வழங்கினாா். தேசியக் கல்லூரியின் நிா்வாகக் குழு உறுப்பினா் ஹா்ஷா முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி. முத்துராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு வேளாண்மையியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் வெ. கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இன்று பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் வேலை தேடுபவா்களாக இல்லாமல், பலருக்கு வேலை வாய்ப்பைத் தருபவா்களாகத் தங்களைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற இளநிலை மாணவா்கள் 11 போ் மற்றும் முதுநிலை மாணவா்கள் 8 போ் பட்டமளிப்பு விழாவில் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். அறிவியல் பிரிவைச் சாா்ந்த 692 மாணவ மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.

தேசியக் கல்லூரியின் தோ்வு நெறியாளா் ஸ்ரீராமச்சந்திரன், அறிவியல் புல முதன்மையா் சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ மாணவிகள், பெற்றோா்கள் என பலா் கலந்து கொண்டனா்.