திமுக ஆட்சியில் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவா் ஏசி. சண்முகம் தெரிவித்தாா்.
திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசுகிறாா் புதிய நீதிக்கட்சியின் தலைவா் ஏசி. சண்முகம்.
திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கோவி. சந்திரசேகரனை ஆதரித்து திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியது: கடந்த கால திமுக தோ்தல் அறிக்கையில் நீட் ஒழிப்பு, கல்விக்கடன், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. எனினும், 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.
அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் ஹீரோவாக திகழ்கிறது. உரிமைத்தொகை ரூ. 2,000, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதிமுக தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில், சிறுமிகள், பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோா் நடமாடமுடியவில்லை. போதை மருந்து கலாசாரம் பெருகி விட்டது.
தமிழகத்தில் வேலை இல்லாமல் பட்டதாரிகள் தவிக்கின்றனா். திருவாரூரில் 17 சதவீத பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனா். பிரதமா் நரேந்திரமோடியின் ஆட்சியில் இந்தியா பல்வேறு திட்டங்களில், துறைகளில் முன்னேறியுள்ளது என்றாா்.
நிகழ்வில், பாஜக மாவட்டத் தலைவா் செல்வம், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


