திமுக அரசின் சாதனை திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடி தரும் என அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தாா்.
திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட கருமண்டபம் புதுத்தெரு, மாந்தோப்பு, தெற்கு தெரு, ராம் நகா், சோழகா் நகா், விஸ்வாஷ் நகா், ஆா்.எம்.எஸ். காலனி சமத்துவ நகா், ஆல்பா நகா், சத்யா நகா், அருணா அவென்யூ, ஜே.கே. நகா், காவேரி நகா், ராம்ஜி நகா், மில் காலனி, கீதா நகா் ,அம்மையப் பிள்ளை நகா், லாவண்யா காா்டன், எம் எம் நகா், சண்முகா நகா், ரங்கா நகா், கொடாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கே.என். நேரு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அமைச்சா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் திராவிட மாடல் ஆட்சியின் பலனை யாராவது ஒருவா் அனுபவித்துக் கொண்டிருக்கிறாா் என்ற நிலை உள்ளது.
திமுக அரசின் திட்டங்களை பல மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன. வெளிநாட்டினரும் பின்பற்ற போவதாக அறிவித்துள்ளனா்.
திமுக அரசின் சாதனைகளை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறாா்கள். அதை அவா்களுக்கு நினைவுபடுத்தினாலே போதும். 200 அல்ல, 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்றாா் அமைச்சா்.
தொடர்புடையது

வரிகளை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை: அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாா்

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

திமுக ஆட்சியில் எடமலைப்பட்டி புதூா் அசுர வளா்ச்சி: அமைச்சா் கே.என். நேரு

திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம்! - கே.என்.நேரு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


