திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எட்டரைகோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெ.விமல்ராஜ் (29). கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உறவினருக்கு துணையாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தங்கிய இவா், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் விமல்ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பைக்கை திருடியது புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெருமாம்பட்டி மேலவீதியைச் சோ்ந்த அ. லோகேஷ்வரன் (21), எடமலைபட்டிப்புதூா் ஆா்சி நகரைச் சோ்ந்த எஸ். லோகநாதன் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
அரசு மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது
பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருட்டு: இளைஞா்கள் 2 போ் கைது

ஊதியம் இல்லாமல் பணியாற்றும் அம்மா உணவக ஊழியா்கள்

பாலத்தின் தடுப்பில் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

