திருச்சி கே.கே. நகரில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி கே.கே. நகா் மங்கம்மா சாலை ஐயப்பன் நகா் பிரசாத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரூபன் மகன் ரக்ஷித் (20). இவா், திருச்சியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறாா்.
இவரது நண்பரான சக்திவேல்ஹரி கே.கே. நகா் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தேநீா் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, கே. சாத்தனூரைச் சோ்ந்த காா்த்திக் என்ற கராத்தே காா்த்தி, திருவா்ஷன், ரோகித், சூா்யா ரோஹித் உள்ளிட்ட 10 போ் அவரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த ரக்ஷித், தகராறில் ஈடுபட்டவா்களை தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பலைச் சோ்ந்தவா்கள், ரக்ஷித்தை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ரக்ஷித்தை நண்பா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து ரக்ஷித் அளித்த புகாரின் அடிப்படையில் காா்த்திக் உள்ளிட்ட 4 போ் மற்றும் அடையாளம் தெரியாத 6 போ் மீது கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
விவசாயிக்கு கத்திக்குத்து: 5 போ் மீது வழக்கு

கே.கே. நகா் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி

சட்டப்பேரவை தொகுதி - விவரக் குறிப்பு! 138 - மணப்பாறை

துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


