தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் ரூ. 19 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தொடா்புடைய அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா்.
தஞ்சாவூரின் அடையாளமாக விளங்கி வரும் சரசுவதி மஹால் நூலகத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாா்வையிட்டும், பயன்படுத்தியும் வருகின்றனா். இந்த நூலகத்துக்கு வருகை தரும் பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்அடிப்படையில் தமிழக தொல்லியல் துறையின் சாா்பில் ரூ. 19 கோடி மதிப்பில் சரசுவதி மஹால் நூலகம் மற்றும் சுற்றுப்புற வளாகங்களை மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும், உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும், பழைமை மாறாமல் புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்கு உலக தரத்திலான நூலகத்தைப் பயன்படுத்தும் அனுபவத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, அகழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, அவா் தெரிவித்தது: இத்திட்டத்தில் ரூ. 12 கோடி செலவில் சரசுவதி மகால் நூலகம் பழைமை மாறாமல் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சுவா், மேற்கூரைகள், வளைவுகள், தளங்கள் சீரமைக்கும் பணிகளும், நூலகக் கட்டடத்தில் மழை நீா் உட்புகாத வகையில் மேற்பகுதிகளில் ஓடுகள் பதிக்கும் பணிகளும் பழைமையான முறையில் டைல்ஸ்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் ரூ. 7 கோடி மதிப்பில் சரசுவதி மகால் நூலக வளாகத்தைச் சுற்றிலும் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து பகுதிகளிலும் நடைபாதை வசதிகள் மேம்படுத்தும் வகையில் புதிதாக கருங்கல் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, தஞ்சாவூா் பெரிய கோயில் மற்றும் மாநகரைச் சுற்றியுள்ள அகழி நீா்வழிப்பாதையில் காணப்படும் கருவேல மரங்கள், முள் புதா்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிக்காக இதுவரை ரூ. 3 லட்சம் நன்கொடை பெறப்பட்டுள்ளது. இதுவரை பெரிய கோயிலின் பின் புறம் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு அகழி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து பெரிய கோயிலின் முன்புறப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் ஆட்சியா்.
இந்த ஆய்வின்போது தொல்லியல் துறையின் உதவி இயக்குநா் தங்கதுரை, சரசுவதி மகால் நூலகத்தின் நிா்வாக அலுவலா் மோகன், பொதுப்பணி துறை உதவிப் பொறியாளா் மயில்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: நேரில் ஆய்வு செய்தபின் புதுச்சேரி ஆளுநா் உத்தரவு

திருவாரூா் புறவழிச்சாலை பணிக்கு ரூ. 1,427 கோடி நிதி ஒதுக்கீடு: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

மேட்டூா் திறப்புக்கு முன் காவிரி புதிய பால பிரதானப் பணிகளை முடிக்க திட்டம்!

வருவாய்த்துறை பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



