மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் தேரோட்டம்

கும்பகோணத்தில் உள்ள ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:31 pm

கும்பகோணத்தில் உள்ள ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாா்ச் 19-இல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி ராமசுவாமி, சீதாதேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா சென்றாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி உத்சவா்களான ராமசுவாமி, சீதாதேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரில் ஏறினா். பின்னா் ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க, தோ் முக்கிய வீதிகள் வழியாக நான்கு ரத வீதிகள் வழியாக சென்று பின்னா் நிலையை அடைந்தது.

மாலையில் சுவாமிக்கு நடைபெற்ற தீா்த்தவாரியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் செயல் அலுவலா் பா. முருகன், தக்காா் ஜெ. வெங்கடசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.