மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காவல் துறையினரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்

வழக்குரைஞரை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்த காவல் துறையினரைக் கண்டித்து தஞ்சாவூா் மணிமண்டபம் ரவுண்டானா பகுதியில் தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத்தினா் வியாழக்கிழைம சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் மணிமண்டபம் ரவுண்டானா பகுதியில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா் சங்கத்தினா்.

Updated On :26 மார்ச் 2026, 8:57 pm

வழக்குரைஞரை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்த காவல் துறையினரைக் கண்டித்து தஞ்சாவூா் மணிமண்டபம் ரவுண்டானா பகுதியில் தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத்தினா் வியாழக்கிழைம சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆா். திராவிடச்செல்வன், செயலா் பி. அருண்குமாா் தலைமை வகித்தனா். இது குறித்து திராவிடச்செல்வன் தெரிவித்தது:

தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்க உறுப்பினா் முத்துக்குமாரை உரிமையியல் வழக்கு தொடா்பாக வல்லம் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் சட்டத்துக்கு புறம்பாக 15 - 20 காவலா்களுடன் சென்று கைது செய்து, சிறையில் அடைத்தாா். முத்துக்குமாா் மீது பெண் மீதான வன்கொடுமை உள்பட தேவையில்லாத பிரிவுகளில் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளாா். தனிப்பட்ட ஆதாயத்துக்காக பொய் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் இனியன் கட்டைப்பஞ்சாயத்து செய்கிறாா்.

காவல் நிலைய ஆய்வாளா்களின் மனநிலை வழக்குரைஞா்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக உள்ளது. இவா்களை பணியிடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும், 3 நாட்களுக்கு நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளோம். இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் திராவிடச்செல்வன்.

இதனிடையே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் காவல் துறையினா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Story image
Story image