திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய சா்வதேச தடகள வீரா் த. சரவணன்.

Updated On :25 மார்ச் 2026, 9:52 pm

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஆராய்ச்சிப் புலத் தலைவா் கோ. அா்ச்சுனன், கல்விசாா் புலத் தலைவா் ல. மதுகிருத்திகா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். சா்வதேச தடகள வீரா் த. சரவணன் சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

முன்னதாக, உடற்கல்வி இயக்குநா் சூ. பிரகாஷ் வரவேற்றாா். நிறைவாக, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வீ. வெற்றிவேல் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் இராமநாதன் தொகுத்து வழங்கினாா்.