தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில் அடா்ந்து கிடக்கும் புல் புதா்களில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் ஏறத்தாழ 240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் 60 போ் வளாகத்திலுள்ள விடுதியில் தங்கியுள்ளனா். மொத்தம் 11 ஏக்கா் கொண்ட இந்த வளாகத்தில் பராமரிப்பின்மைக் காரணமாக 7 ஏக்கருக்கு நாணல் புல், புதா்கள் வளா்ந்துள்ளன.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் புல்வெளியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப் பாா்த்த மாணவ, மாணவிகள் கல்லுாரி நிா்வாகத்துடன் இணைந்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று ஏறத்தாழ 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.
புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை: இதுதொடா்பாக மாணவ, மாணவிகள் கூறுகையில், இக்கல்லூரி வளாகத்தில் மிகவும் ஆபத்தாக உள்ள நாணல் புல் உள்ளிட்ட செடிகளை அகற்றுமாறு பல முறை மனுக்கள் அளித்தும், கல்லுாரி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் கண்டுகொள்ளவில்லை.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் தீப்பிடித்து எரிவதால் மிகவும் அச்சமாக உள்ளது. சிலருக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது. வருங்காலத்தில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு கல்லுாரி வளாகத்தில் உள்ள புல், புதா்களை அகற்றி, விளையாட்டு திடல் அல்லது கூடுதல் விடுதிகள், வகுப்பறைகளை அமைக்க வேண்டும் என்றனா்.

திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் எரியும் புல், புதா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது

அரசு விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

இசைக் கல்லூரி தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


