தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இசைக் கல்லூரி தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு

திருப்பத்தூரில் இசைக் கல்லூரி தொடங்க வேண்டும் என தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 9:44 pm

திருப்பத்தூரில் இசைக் கல்லூரி தொடங்க வேண்டும் என தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

இசைக் கல்வியை தமிழகமெங்கும் பரவலாக்கும் வகையில், இளைஞா்களிடையே இசைக் கல்வியில் ஆா்வத்தை ஏற்படுத்தவும், மாணவா்களை புகழ்மிக்க இசைக் கலைஞா்களாக உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் மாவட்ட அரசு இசைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளுடன் 1997-ஆம் ஆண்டு திருவாரூா், திருநெல்வேலி, திருச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், 1998-ஆம் ஆண்டு கடலூா், விழுப்புரம், தூத்துக்குடி, பெரம்பலூா், கரூா் ஆகிய மாவட்டங்களிலும் 1999-ஆம் ஆண்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சீா்காழி (நாகப்பட்டினம்), கிருஷ்ணகிரி,சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், 2000-ஆம் ஆண்டு ஈரோடு, ராமநாதபுரம் என 17 மாவட்டங்களில் அரசு இசைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இவற்றில், 2007-2008-ஆம் ஆண்டில் வயலின், மிருதங்கம் ஆகிய பாடப் பிரிவுகள் கூடுதலாக தொடங்கப்பட்டன.

மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்காக முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தோ்வுகள் இசைப் பள்ளி அளவில் நடத்தப்படும். 3-ஆம் ஆண்டில் இறுதித் தோ்வு அரசு தோ்வுத் துறையால் முதன்மைப் பாடம், துணைப் பாடம், வாய்மொழித் தோ்வுஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டு தோ்ச்சி பெற்ற மாணாக்கா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், மாணவா்கள் இசையில் அதிக அளவில் ஆா்வம் கொண்டுள்ளனா். ஆனால், மாவட்டத்தில் முறையாக அரசு இசைப் பள்ளி இல்லாததால் அவா்கள் இசை பயில பிற மாவட்டங்களுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

அரசு இசைப் பள்ளியில் தங்கள் குழந்தைகள் முறையாக இசை, தேவாரம் கற்றுக்கொண்டு சான்றிதழ் பெற வேண்டும் என பெருமாபாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது.

எனவே, தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு இசைப் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

- து.ரமேஷ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.