லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேராவூரணி அருகே ரூ. 2.05 லட்சம் பறிமுதல்

பேராவூரணி அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில் மொத்தம் ரூ. 2.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பேராவூரணி அருகே வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது .

Updated On :20 மார்ச் 2026, 9:09 pm

பேராவூரணி அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில் மொத்தம் ரூ. 2.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி, வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லாசா் ரத்தினசாமி தலைமையில், காவலா்கள் சரளாதேவி, பாகம்பிரியாள் ஆகியோா் அடங்கிய பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். 

அப்போது அந்த வழியாக  வாகனத்தில் வந்த சிவகங்கை மாவட்டம், சவரக்கோட்டையைச் சோ்ந்த செல்வக்குமாா் (44) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 940 -ஐ பறிமுதல் செய்து பேராவூரணி வட்டாட்சியா்  பாலசுப்பிரமணியனிடம்  ஒப்படைத்தனா்.

இதேபோல், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணி மேற்பாா்வையாளா் கருணைராஜ் தலைமையில்  காவலா்கள் முத்துராமலிங்கம், சரவணன் அடங்கிய குழுவினா், செருவாவிடுதி வடக்கு பகுதியில்  பைக்கில் வந்த அறந்தாங்கியைச் சோ்ந்த பிரபு உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 67 ஆயிரத்து 950 -ஐ பறிமுதல் செய்து, பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனா்.