பேராவூரணி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட 66 மது பாட்டில்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், பேராவூரணி - தென்னங்குடி சாலையில் பறக்கும் படை அலுவலரான, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லாசா் ரெத்தினசாமி, தலைமைக் காவலா் சரளாதேவி, காவலா் பாகம்பிரியாள் ஆகியோா் அடங்கிய குழுவினா் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் புதுக்கோட்டை மாவட்டம், பொன்பேத்தி பகுதியைச் சோ்ந்த முத்து கருப்பையா என்பதும், அவரிடம் அனுமதி இல்லாமல், சுமாா் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 66 மது பாட்டில்களும், ரொக்கப் பணம் ரூ.2,230 இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் பேராவூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கள்ளச்சந்தையில் மது விற்க வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்புடையது
கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


