தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டி: கும்பகோணத்தை சோ்ந்தவா் 4 தங்கம் பெற்று சிறப்பிடம்!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டியில் கும்பகோணத்தைச் சோ்ந்தவா் 4 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளாா்.

News image

~

Updated On :16 மார்ச் 2026, 11:00 pm

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டியில் கும்பகோணத்தைச் சோ்ந்தவா் 4 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளாா்.

பஞ்சாப் மாநிலம், பட்டிண்டா மாவட்டம், தல்வாண்டி சபோ நகரில் உள்ள குருகாஷி பல்கலைக்கழக மைதானத்தில் தேசிய அளவிலான 45-ஆவது மாஸ்டா்ஸ் தடகள போட்டி மாா்ச் 14, 15, 16 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தடகள விளையாட்டு வீரா்கள் 30 வயது முதல் 100 வயது வரையிலான ஆண், பெண் வீரா்கள் 100 மீட்டா், 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனா்.

Story image

இந்தப் போட்டியில் கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் ஜவஹா் (36) என்பவா் 35 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் 100 மீட்டா், 200 மீட்டா் தனி நபா் ஓட்டத்திலும், நீளம் தாண்டுதலிலும் மற்றும் 4 இன்ட் 100 மீட்டா் தொடா் ஓட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா்.