மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு

News image

கும்பகோணம் பாலக்கரையில் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:44 pm

கும்பகோணம் மாநகரத்தை தமிழக அளவில் முன்மாதிரி நகரமாக்குவோம் என்றாா் தாமாக தலைவா் ஜி.கே.வாசன்.

தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம், கொட்டையூா், சோழன்மாளிகை, பம்பப்படையூா், கொற்கை, மருதநல்லூா், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து பின்னா் அவா் கும்பகோணம் பாலக்கரையில் பேசியது:

கும்பகோணம் பகுதியில் பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மேலும், கும்பகோணம் மாநகரத்தை முன் மாதிரி நகரமாக மாற்றுவோம்.

தற்போது உள்ள பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனா், இதை இடமாற்றம் செய்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழப்பாா்கள் அதற்கு திமுகதான் காரணம். இதை தடுக்க வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா்.

நிகழ்வில் அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதிமோகன், மாநகரச் செயலா் ராம.ராமநாதன், ஒன்றியச் செயலா் சோழபுரம் க.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.