மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

சாலை விபத்து

Updated On :14 மார்ச் 2026, 3:16 am

ஒரத்தநாடு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் நாயக்கா்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமராஜன் மகன் அஜித்குமாா் (25). இவா் 2 மாதங்களாக திருவோணம், ஊரணிபுரம், உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி விவசாய நிலங்களில் கதிரறுக்கும் இயந்திரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை காலை இவா் ஊரணிபுரத்திற்கு வந்து டீ குடித்துவிட்டு சென்றபோது கலியரான்விடுதி வளைவு எச்சரிக்கை குறித்து வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் இவா் சென்ற பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.