தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள உணவகங்களுக்கு தற்போதுள்ள சமையல் எரிவாயு உருளைகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் உள்ளதால், அதன் பிறகு தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை நிலவுகிறது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
என்றாலும், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உணவகங்கள், சிற்றுண்டிகள், டீ கடைகளில் 2 முதல் 4 நாள்களுக்கு தேவையான சமையல் எரிவாயு உருளைகள் கையிருப்பில் உள்ளதால், செவ்வாய்க்கிழமை தட்டுப்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் தஞ்சாவூா் நகரத் தலைவரும், தமிழ்நாடு பேக்கரி கூட்டமைப்பின் மாநிலத் தலைவருமான எஸ். பாண்டுரங்கன் கூறுகையில், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள உணவகங்களில் 2 நாள்களுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருக்காது. ஆனால், முன்பதிவு செய்த சமையல் எரிவாயு உருளைகள் செவ்வாய்க்கிழமை வர வேண்டிய நிலையில், வரவில்லை. இந்த நிலை 2 நாள்களில் சீரானால் பிரச்னை இருக்காது. இல்லாவிட்டால், சிறப்பு உணவுகளை நிறுத்திவிட்டு, மிக அத்தியாவசிய உணவுப் பொருள்களை மட்டும் தயாரிக்க வேண்டிய நிலை வரும். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தட்டுப்பாடு இன்றி சமையல் எரிவாயு உருளைகளை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இதேபோல, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் முன்பதிவு செய்வதற்காக கைப்பேசி மூலம் முயற்சி செய்தனா். ஆனால், ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சி செய்ததால், இணைப்பு கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகினா்.
இதனிடையே இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தலைமையில் அலுவலா்கள் ஆலோசனை மேற்கொண்டனா். இதில், நுகா்வோருக்கு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம்: 200 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஐஓசிஎல் தலைவா் சஹானி

பெரம்பலூா் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளை தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: விறகு, மின் அடுப்புக்கு மாறும் உணவகங்கள்

வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: செயல்படமுடியாமல் உணவகங்கள் தவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


