கும்பகோணத்தில் அத்திவரதா் தரிசனத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், சத்துவாஞ்சேரியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (45). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் கும்பகோணம் பிரம்மன் கோயிலில் நடைபெறும் அத்திவரதா் தரிசன நிகழ்வில் பங்கேற்க ரயிலில் தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை வந்த சசிக்குமாா், கோயிலில் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்தாா். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சசிக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


