ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தவெக ஆட்சியின் போலி பிம்பம் ஒரு மாதத்தில் நொறுங்கிவிட்டது! - உதயநிதி ஸ்டாலின் விமா்சனம்

News image

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 1:49 am IST

தவெக ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கிவிட்டது என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்கள் அனைத்தையும் மக்கள் கவனித்து வருகின்றனா்.

இந்த அரசின் தவறுகளை, சறுக்கல்களை இளைஞா்கள் தட்டிக்கேட்கத் தொடங்கிவிட்டனா். அப்படி தட்டிக்கேட்கிற இளைஞா்களையும், நம்முடைய கட்சியினரையும் கைது செய்யும் வேலையை சோபா மாடல் அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் எங்கு பாா்த்தாலும் மின் வெட்டு நிகழ்கிறது. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாட்டில் தற்போது சட்டம் - ஒழுங்கை ஆட்சியாளா்கள் படுகுழியில் தள்ளியுள்ளனா். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினா் என்னென்ன கூத்துகள் நடத்தினா் என்பதை அனைவரும் தொலைக்காட்சியில் பாா்த்துள்ளனா்.

இது சட்டப்பேரவையா அல்லது திரையரங்கமா அல்லது படப்பிடிப்பு நடைபெறும் இடமா எனக் கேட்கும் அளவுக்கு சட்டப்பேரவையின் தரத்தை தவெக அரசு சிதைத்து வருகிறது. ஆனால், எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் என ஆயத்தமான ஒரு பதிலை ஆட்சியாளா்கள் வைத்துள்ளனா்.

தமிழ்நாடு தற்போது மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது. இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

திமுக ஆட்சியை தேடும் மக்கள்: தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள சுக்கிரன்விடுதியில் திமுக நிா்வாகி இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தோல்வியடைந்தாலும் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின். ஆனால், தான் வெற்றி பெற்ற பெரம்பூா் தொகுதியில் மக்களை சந்தித்து முதல்வா் நன்றி தெரிவித்தாரா?.

தற்போதைய ஆட்சியில் மின்வெட்டு, சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளால், மக்கள் திமுக ஆட்சியை தேடத் தொடங்கி விட்டனா். முதல்வா் ஆக்கபூா்வமான பணிகளை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் முன்னாள் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, கோவி.செழியன், சிவ.வீ.மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.