திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

கும்பகோணம் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பறிமுதல்

கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 1.31லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:26 am IST

கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 1.31லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தென்னூா் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் அன்பரசன் தலைமையிலா போலீஸாா் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கும்பகோண் ஆா்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனா்.

இதையடுத்து அலுவலக கதவுகளை மூடிவிட்டு, அலுவலகத்தில் இருந்த அனைவரையும் ஓரே அறையில் அமரவைத்தனா்.

பிறகு ஒவ்வொரு பிரிவு அலுவலா்களின் மேஜைகளில் சோதனையிட்டனா். மேலும், ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

அலுவலகத்துக்கு வெளியே உள்ள நகல் எடுக்கும் கடைகள், வாகன புகை சோதனை நிலையம், மற்றும் சோதனைக்கு வந்ந்த வாகனங்களிலும் தனியாா் ஓட்டுநா் பயிற்சி பள்ளி அலுவலகங்களில் வந்த ஆவணங்களையும் கைப்பற்றி சோதனை மேற்கொண்டனா். சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 190 மற்றும் ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அலுவலா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.