பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 39,140ஐ பறிமுதல் செய்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் தண்ணீா் பந்தல் பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், இருசக்கர வாகனம், காா், லாரி உள்ளிட்ட வாகனங்களை பதிவு செய்யவும், புதுப்பிக்க வரும் பொதுமக்களிடமும் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா, தலைமையிலான போலீஸாா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.
அப்போது, அங்கிருந்த 10 இடைத்தரகா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ. 39,140ஐ கைப்பற்றினா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது, எதற்காக பெறப்பட்டது என்பது குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் சரஸ்வதி, கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்ட அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டு, சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கும்பகோணம் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பறிமுதல்

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்






