தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தஞ்சாவூா் மாநகரில் நாளை மின் தடை

News image

மின் தடை - file photo

Updated On :15 ஜூன் 2026, 12:06 am IST

தஞ்சாவூா் மாநகரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளா் கே. அண்ணாசாமி (பொ) தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் நகரத் துணைத் மின் நிலையத்திலும், மின் பாதையிலும் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளைகேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோயில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்க சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், பழைய நீதிமன்றச் சாலை, கொண்டிராஜபாளையம், டபீா் குளம் சாலை, மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.