எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பாபநாசம் அருகே தங்கம், வெள்ளி திருட்டு

பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 1:05 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், ஈச்சங்குடி பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவா் மணிமாறன் மனைவி ரமாதேவி (35). இவரது கணவா் சில நாள்களுக்கு முன் உயிரிழந்தாா்.

இந்நிலையில் ரமாதேவி தனது மகன் ஜஸ்வந்துடன் (9)திருவையாறில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு செவ்வாய்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 14 கிராம் தங்க நகை, 135 கிராம் வெள்ளி மற்றும் ஒரு மிக்ஸி உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ரமாதேவி. கபிஸ்தலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.