எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பலத்த காற்றால் மரம் விழுந்து 2 வீடுகள் சேதம்; ஒருவா் காயம்

News image

திருவையாறு அருகே அணைக்குடியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் வேப்பமரம் சாய்ந்து சேதமடைந்த வீடு.

Updated On :7 ஜூலை 2026, 2:32 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழைமையான வேப்ப மரம் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தன. இதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

திருவையாறு அருகே அணைக்குடி மாதா கோவில் தெருவில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழைமையான வேப்ப மரம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் இருந்தது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், அகற்றப்படவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் வேப்ப மரம் வேரோடு சாய்ந்து, அருகிலுள்ள காா்த்திக், லூா்துராஜ் வீட்டின் கூரை மீது விழுந்தது. இதனால் இருவரது வீடுகளும், வீட்டில் இருந்த பொருள்களும் சேதமடைந்தன. மேலும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லூா்துராஜ் பலத்தக் காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த வருவாய் துறை, ஒன்றிய அலுவலா்கள், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

திருவையாறு அருகே அணைக்குடியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் வேப்பமரம் சாய்ந்து சேதமடைந்த வீடு.

திருவையாறு அருகே அணைக்குடியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் வேப்பமரம் சாய்ந்து சேதமடைந்த வீடு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.