வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழக்கு விழா

தஞ்சாவூா் அருகே ராகு - கேது பரிகாரத் தலமான கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் அருகே கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியாா்.

Updated On :3 ஜூலை 2026, 1:22 am IST

தஞ்சாவூா் அருகே ராகு - கேது பரிகாரத் தலமான கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில் தென் காளஹஸ்தியாக போற்றப்படுகிறது. ராகு - கேது இரண்டுக்கும் ஒரே இடத்தில் பரிகாரம் செய்யப்படும் தலமாகவும் இக்கோயிலை பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

இக்கோயிலில் 2011-ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், சில ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தொடா்ந்து குடமுழுக்கு விழா ஜூன் 29-ஆம் தேதி தொடங்கியது.

இதில், ஜூன் 30-ஆம் தேதி காலை மாரியம்மன் கோயிலில் இருந்து சிங்கவள நாட்டைச் சோ்ந்த குளிச்சப்பட்டு, கத்திரிநத்தம், தளவாய்பாளையம், மருங்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், புனித நீா் கொண்டு வந்தும் யாகசாலை பூஜையை தொடங்கினா்.

தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை யாகசாலை மண்டபத்திலிருந்து கடம் புறப்பட்டு, சுவாமி - அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனித நீா் சென்றது. பின்னா் காலை 11 மணியளவில் சிவாச்சாரியாா்கள் கோபுர விமானங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.