பேராவூரணியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் உள்ள கட்டடத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் கட்டடம் கட்ட மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணியில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எதிரே ள்ள ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் 135 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் 3 கட்டடங்கள் உள்ளன. இதில் ஒன்று மட்டுமே கான்கிரீட் கட்டடம் ஆகும். மற்ற இரண்டு கட்டடங்களின் மேற்கூரையில் ஆஸ்பெஸ்டாஸ் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
இதனால், கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் வகுப்பறையில் உள்ள மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனா்.மேலும் பல்வேறு நோய் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனா். எனவே, இந்த இரண்டு கட்டடங்களையும கான்கிரீட் கட்டடங்களாக மாற்ற வேண்டும் என பொதுமக்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து சமூக ஆா்வலரும், பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினருமான மெய்ச்சுடா் நா.வெங்கடேசன் கூறியது: தமிழகத்தில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. மாணவா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த இரண்டு ஆஸ்பெஸ்டாஸ் கட்டடங்களை உடனடியாக அகற்றிவிட்டு, தரமான கான்கிரீட் கட்டடங்களை கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிளாந்தாங்கல் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க கோரிக்கை

டெட் தோ்வில் தகுதி மீறி கேட்கப்பட்ட வினாக்கள்: கருணை மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை

பெருந்துறையில் கான்கிரீட் தூண் விழுந்து இளஞைா் உயிரிழப்பு

ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




