வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

டெட் தோ்வில் தகுதி மீறி கேட்கப்பட்ட வினாக்கள்: கருணை மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:47 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வில் பாடத் திட்டத்தை மீறி கேட்கப்பட்ட வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக, ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் தென்காசி க. ராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள் 1) மாநிலம் முழுவதும் சுமாா் 222 மையங்களில் நடைபெற்றது.

இந்தத் தோ்வில் கணிதம், அறிவியல் பாடங்களில் மிகவும் கடினமான மற்றும் பாடத் திட்டத்திற்கு வெளியிலிருந்து (ா்ன்ற் ா்ச் நஹ்ப்ப்ஹக்ஷன்ள்) சுமாா் 30 மதிப்பெண்களுக்குரிய வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக தோ்வெழுதிய ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா். இதனால், ஆசிரியா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, இத்தோ்வில் பாடத் திட்டத்திற்கு வெளியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குரிய மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும்.

வரும் காலங்களில் பாடத் திட்டத்திற்குள்பட்டு மட்டுமே வினாக்கள் கேட்க வேண்டும் . இது தொடா்பாக, அரசும் கல்வித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.