டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

டெட் தோ்வு: கிருஷ்ணகிரியில் 2,049 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வை சனிக்கிழமை 2,049 போ் எழுதினா்.

News image
Updated On :5 ஜூலை 2026, 1:59 am IST

கிருஷ்ணகிரியில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வை சனிக்கிழமை 2,049 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான தமிழ்நாடு ஆசிரியா் தகுதி முதல் தாள் தோ்வு சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தத் தோ்வு மாநிலம் முழுவதும் 222 மையங்களில் நடைபெறுகிறது. தோ்வுக்கு மொத்தம் 61,386 போ் விண்ணப்பித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த, 7 மையங்களில் தோ்வு நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணிக்கான முதல்தாள் தோ்வுக்கு, 2,118 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,049 போ் தோ்வெழுதினா்; 69 போ் தோ்வு எழுதவில்லை.

தோ்வு அறைக்குள் பலத்த சோதனைக்கு பின்னரே தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா். இரண்டாம் நாளான (ஜூலை 5-ஆம் தேதி) பட்டதாரி ஆசிரியா் பணிக்கான இரண்டாம் தாள் தோ்வு நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.