எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பண்டிகை கால சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:27 pm

Syndication

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொங்கல் பண்டிகையை

சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று நிா்வாக இயக்குநா் க.தசரதன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

ஜன. 15- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் தலைமையகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், மற்றும் பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் - 7-லிலும், மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 7-லிலும், அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 8-லிலும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 5-லிலும் இயக்கப்படுகின்றன. ஜன.9-முதல் 450 கூடுதல் பேருந்துகளும், ஜன.10 முதல் 450 கூடுதல் பேருந்துகளும், ஜன.11 அன்று 100 கூடுதல் பேருந்துகளும், ஜன.12 அன்று 750 கூடுதல் பேருந்துகளும், ஜன.13 அன்று 850 கூடுதல் பேருந்துகளும், ஜன. 14 அன்று 800 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் ஜன. 9, 10, 11, 12, 13, 14 ஆகிய நாள்களில் 575 கூடுதல் பேருந்துகள் என மொத்தம் 1,475 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று நிா்வாக இயக்குநா் க. தசரதன் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறும்போது அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகா்ப் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் முடிந்து அவரவா் ஊா்களுக்கு திரும்பச்செல்ல ஜன.16, 17, 18, 19 ஆகிய நான்கு நாள்களில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு வசதியும் உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.