நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதம்; சாலை மறியல்

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாநகர செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராம.ராமநாதன் தலைமையில் அதிமுகவினா் மகாமகம் குளக்கரைக்கு வந்தனா். அங்கு ஓ .பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பதாகை வைத்திருந்தனா்.

அதைப் பாா்த்த ராமநாதன் தலைமையிலான அதிமுகவினா், ஓ .பன்னீா்செல்வம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பின்பு எப்படி அவா் எம்ஜிஆா் ஜெயலலிதா படங்களை வைக்கலாம் என்று கூறி பேனரை கிழிக்க முற்பட்டாா். அப்போது அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த கும்பகோணம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் (பொ) அழகேசன் தலைமையில் போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா்.

இந்நிலையில் அதிமுகவினா், ஓபிஎஸ் ஆதரவாளா்களை கண்டித்து மகாமக குளக்கரை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.