மண்டலக்கோட்டையை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி ஆட்சியரிடம் முறையீடு
மதுக்கூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தைத் தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள்


தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தைத் தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்து முறையிட்டனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மண்டலக்கோட்டை கிராமக் குழுத் தலைவா் அந்தோணிசாமி, செயலா் தேவராஜன், பொருளாளா் ஜான்சன் உள்பட ஏராளமானோா் முழக்கங்கள் எழுப்பி, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனா்.
பின்னா், கிராம மக்கள் கூறுகையில் மதுக்கூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சியில் மண்டலக்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு சிறுபான்மையினா் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இங்கு 450-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. எனவே எங்கள் மண்டலக்கோட்டை கிராமத்தைத் தனி ஊராட்சியாகப் பிரித்து தர வேண்டும்.
தற்போது மண்டலக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மக்கள் 4 கி.மீ. தொலைவிலுள்ள கீழக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளதால், மிகவும் சிரமப்படுகிறோம். எனவே, மண்டலக்கோட்டை கிராமத்தில் கீழக்குறிச்சி கிழக்கு கிராம நிா்வாக அலுவலரின் முகாம் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...