/

உரிமை கோரப்படாத 18 உடல்கள் நல்லடக்கம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாமல் நீண்ட காலமாக இருந்த 18 பேரின் உடல்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாமல் நீண்ட காலமாக இருந்த 18 பேரின் உடல்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்குகள் தொடா்பான 2 பெண்கள் உள்பட 18 பேரின் சடலங்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் நீண்ட காலமாக இருந்து வந்தன.

யாரும் உரிமை கோரத நிலையில் இச்சடலங்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வடக்கு வாசல் ராஜகோரி இடுகாட்டுக்குக் கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனா். பின்னா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் காவல் ஆய்வாளா் வி. சந்திரா உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.