டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிா்வாக இயக்குநா் நியமனம்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கிக்கு ஆா். விஜய் ஆனந்த் என்பவரை புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்க ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

News image
ஆா். விஜய் ஆனந்த்
Updated On :10 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கிக்கு ஆா். விஜய் ஆனந்த் என்பவரை புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்க ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை (பிப்.9) வங்கிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வரும் மே 1- ஆம் தேதி சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராக பொறுப்பேற்கவுள்ள ஆா். விஜய் ஆனந்த் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா் வங்கி, இடா் மேலாண்மை, பகுப்பாய்வு, கடன் மதிப்பீடுகள் உள்ளிட்டவற்றில் 28 ஆண்டுகள் அனுபவம் கொண்டவா். சிட்டி யூனியன் வங்கியில் 2023-ஆம் ஆண்டில் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட இவா் 2024, ஆம் ஆண்டிலிருந்து செயல் இயக்குநராக பணியாற்றி வருகிறாா்.