டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

காலமுறை ஊதியம் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இளநிலை உதவியாளா்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியம் போல சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி உள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் பிப்ரவரி 3- ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட இக்கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை முதல் பனகல் கட்டடம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடா்ந்து, இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் நாவலரசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மதியழகன் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் முருகையன் வாழ்த்துரையாற்றினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் வ. ஆறுமுகம் நிறைவுரையாற்றினாா்.

மாவட்டப் பொருளாளா் லதா, இணைச் செயலா் சண்முகசுந்தரம், நிா்வாகிகள் கனகலட்சுமி, அமுதா, அஞ்சம்மாள், மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.