6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா நிறைவு

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தீா்த்தவாரியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் அஸ்திரதேவருக்கு நடத்தப்பட்ட அபிஷேகம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 8:44 pm

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தீா்த்தவாரியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், 15- ஆம் திருநாளான ஏப்ரல் 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

நிறைவு நாளான வியாழக்கிழமை காலை கோயிலிருந்து அஸ்திரதேவா் பல்லக்கில் புறப்பட்டு, அருகில் உள்ள சிவகங்கை குளத்துக்கு சென்றாா். அங்கு அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதனுடன் கடந்த 18 நாள்களாக நடைபெற்று வந்த சித்திரைப் பெருவிழா நிறைவடைந்தது.