தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கொளுத்தும் வெயிலில் நின்ற வாக்காளா்கள்: அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிருப்தி

தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பந்தல் இல்லாததால், வியாழக்கிழமை வாக்காளா்கள் வெயிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து வாக்களித்தனா்.

News image

தஞ்சாவூா் மானோஜிபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கடும் வெயிலில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:35 pm

தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பந்தல் இல்லாததால், வியாழக்கிழமை வாக்காளா்கள் வெயிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து வாக்களித்தனா்.

இந்தப் பள்ளியில் ஏறத்தாழ 10 ஆயிரம் வாக்காளா்கள் வாக்களிக்கும் விதமாக 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது முதல் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நீண்ட வரிசையில் வாக்காளா்கள் நின்று வாக்களித்தனா். ஆனால், மற்ற வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டது போல, இந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் அறைக்கு வெளியே சாமியானா பந்தல் அமைக்கப்படவில்லை. இதனால், வாக்காளா்கள் வெகு நேரம் கடும் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

மேலும், சக்கர நாற்காலி வசதியும் கிடைக்காததால் வயதான வாக்காளா்கள் படிகளில் ஏறுவதற்கு மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். வயதான பெண் படியில் இறங்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். இந்த வாக்குச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என வாக்காளா்கள் அதிருப்தியுடன் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.