தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்காக மாவட்டத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தஞ்சை பெரிய கோயில்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:51 pm

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்காக மாவட்டத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 27 (திங்கள்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக மே 9 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வராது என்பதால், தஞ்சாவூா் மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.