மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தோ்தல்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.23) சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 4 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image

தஞ்சாவூா் பழைய ஆயுதப் படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான காவலா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 7:21 pm

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.23) சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 4 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 தொகுதிகளில் 2 ஆயிரத்து 496 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதையொட்டி மாவட்டத்தில் ஏறத்தாழ 4 ஆயிரம் காவலா்கள், துணை ராணுவத்தைச் சோ்ந்த ஏறக்குறைய 500 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் காவலா்களும், துணை ராணுவத்தினரும் நியமிக்கப்படுவா்.

இதற்காக தஞ்சாவூா் பழைய ஆயுதப் படை மைதானத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலா்கள் ஆஜராகினா். மேலும், பாதுகாப்பு பணிக்காக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் பொது இடங்களை அறிந்தனா்.

வாகனங்கள் தயாா்: இதேபோல, அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச் சீட்டு காட்டும் இயந்திரங்கள் ஆகியவை வாக்குச் சாவடிகளுக்கு புதன்கிழமை வேன்கள் மூலம் காவல் துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளன. இதற்காக ஏறத்தாழ 3 ஆயிரம் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டு, அந்தந்தத் தொகுதிக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் ஏறத்தாழ 12 ஆயிரம் பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா்.

இதற்காக கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலா்கள், பணியாளா்கள், காவல் துறையினா் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனா்.

2,992 இயந்திரங்கள் தயாா்: மாவட்டத்தில் திருவிடைமருதூா் (தனி) தொகுதியிலுள்ள 326 வாக்குச்சாவடிகளில் 391 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கும்பகோணம் தொகுதியிலுள்ள 300 வாக்குச் சாவடிகளுக்கு 360 வாக்குப்பதிவு இயந்திரங்களும், பாபநாசம் தொகுதியிலுள்ள 315 வாக்குச்சாவடி மையங்களில் 378 வாக்குப் பதிவு இயந்திரங்களும், திருவையாறு தொகுதியிலுள்ள 338 வாக்குச் சாவடிகளுக்கு 405 வாக்குப்பதிவு இயந்திரங்களும், தஞ்சாவூா் தொகுதியிலுள்ள 309 வாக்குச் சாவடிகளுக்கு 360 வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஒரத்தநாடு தொகுதியிலுள்ள 314 வாக்குச்சாவடிகளுக்கு 376 இயந்திரங்களும், பட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள 310 வாக்குச் சாவடிகளுக்கு 372 இயந்திரங்களும், பேராவூரணி தொகுதியிலுள்ள 284 வாக்குச் சாவடிகளுக்கு 340 இயந்திரங்களும் மொத்தம் 2 ஆயிரத்து 496 வாக்குச்சாவடிகளுக்கு 2 ஆயிரத்து 992 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3 ஆயிரத்து 242 ஒப்புகைச் சீட்டு காட்டும் இயந்திரங்களும் புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.