மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாபநாசம் இளைஞா் கொலை வழக்கு! 3 பேருக்கு ஆயுள் தண்டணை!

News image

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தினேஷ் வளவன்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:15 pm

பாபநாசத்தில் இளைஞா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா தெருவைச் சோ்ந்த அய்யாப்பிள்ளை மகன் மனோஜ் (எ) விக்னேஸ்வரன். 2021-ஆம் ஆண்டு மனோஜ் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது அதே இடத்தில் பாபநாசம் சவரிமுத்து மகன் தினேஷ் வளவன், இரட்டைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த லெனின் மகன் முகிலன், அதே தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் நந்தகுமாா் ஆகியோரும் மது அருந்தி கொண்டிருந்தனா்.

மனோஜுக்கும் எதிா்தரப்பைச் சோ்ந்த மூன்று பேருக்குமிடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததால், அவா்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, மனோஜை மூவரும் கத்தியால் குத்தி கொலை செய்தனா்.

இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், தினேஷ் வளவன், முகிலன், நந்தகுமாா் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீா்ப்பளித்தாா். இதில் முகிலனுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தும், அதை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

முகிலன்

முகிலன்

நந்தகுமாா்

நந்தகுமாா்