திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி சுடலை மாட சுவாமி கோயில் பூசாரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி 3ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சீவலப்பேரியைச் சோ்ந்தவா் சிதம்பரம் என்ற துரை(41). இவா், சீவலப்பேரி சுடலை மாட சுவாமி கோயில் பூசாரியாக இருந்து வந்தாா். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கோயில் திருவிழாவின் போது கடை நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் அவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தங்கப்பாண்டி (29), பேச்சுக் குட்டி (29), முருகன் (28) உள்பட 13 பேரை சீவலப்பேரி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ராபின்சன் ஜாா்ஜ் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் பெயா் குறிப்பிட்டுள்ள 3 பேருக்கும் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், மேலும் இரு பிரிவுகளில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.4,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
முருகனுக்கு மற்றொரு பிரிவில் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனைகளை மூவரும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். எஞ்சிய 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கதிரவன் ஆஜரானாா்.
இவ்வழக்கில், திறம்படசெயல்பட்ட திருநெல்வேலி ஊரக உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷ், அப்போதைய காவல் ஆய்வாளா் பெருமாள் (தற்போது தென்காசியில் பணி) தலைமைக் காவலா் முத்துலெட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.
தொடர்புடையது

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


